திருச்சி தெற்கு மாவட்ட திமுக வுக்கு உட்பட்ட பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 402 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்த லுக்கு திமுக ஆயத்தமாகி வருகிறது. இதன் ஒருபகுதியாக தேர்தலில் போட்டியிட விரும்பு வோரிடமிருந்து மாவட்டந்தோறும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. அதன்படி, திருச்சி தெற்கு மாவட்ட திமுகவுக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள திருச்சி மாநகராட்சியின் ஒருபகுதி, மணப் பாறை, துவாக்குடி நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் போட்டியிட விரும்பும் திமுகவின ருக்கான விருப்ப மனு விநியோகம் சத்திரம் பேருந்து நிலையம் அருகே வி.என்.நகரிலுள்ள கட்சி அலுவலகத்தில் நவ.25-ம் தேதி தொடங்கியது.
விண்ணப்ப படிவத்தை ரூ.10 செலுத்திப் பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் மாமன்ற உறுப்பினருக்கு ரூ.10 ஆயிரம், நகர்மன்ற உறுப்பின ருக்கு ரூ.5 ஆயிரம், பேரூராட்சி உறுப்பினருக்கு ரூ.2,500 கட்டணத் தொகையுடன் திமுகவினர் தங்களது விருப்ப மனுக்களை கட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
தெற்கு மாவட்ட திமுகவினர் தங்களது விருப்ப மனுக்களை அளிக்க நவ.30-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தொடர்மழை காரண மாக டிச.1-ம் தேதி வரை நீட்டித்து மாவட்டப் பொறுப்பாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி உத்தரவிட்டார். இதையடுத்து 1-ம் தேதி மாலை 5 மணி வரை கட்சியினர் விருப்ப மனுக்களை அளித்தனர்.
இதில், அதிகபட்சமாக, திருச்சி மாநகராட்சியில் தெற்கு மாவட்ட கட்டுப்பாட்டிலுள்ள 38 வார்டுகளில் போட்டியிட 250-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். திருச்சி தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் போட்டியிட மொத்தம் 402 பேர் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர்.
மாமன்ற உறுப்பினர்களில் இருந்து மேயர், துணை மேயர் தேர்வு செய்யப்படவுள்ள நிலை யில், மலைக்கோட்டை பகுதிச் செயலாளர் மதிவாணன் 14-வது வார்டுக்கும், திருவெறும்பூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரனின் மகன் சிவா 64-வது வார்டுக்கும் விருப்ப மனுக்களை அளித்துள்ளது குறிப் பிடத்தக்கது என திமுகவினர் தெரிவித்தனர்.
இதுதவிர திருச்சி மாநகராட் சியில் 27 வார்டுகளை உள்ளடக்கிய மத்திய மாவட்ட திமுக மற் றும் புறநகர் பகுதிகளைக் கொண்ட வடக்கு மாவட்ட திமுகவினரிடமிருந்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் இதுவரை பெறப்படவில்லை. மேயர் வேட்பாளராக வாய்ப்புள்ளதாக கருதப்படும் மாநகரச் செயலாளர் மு.அன்பழகன், மகளிரணி விஜயா ஜெயராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மத்திய மாவட் டத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பிருப் பதால், தேதி அறிவிக்கப்படும் சமயத்தில் விருப்ப மனுக்களைப் பெற்று, ஓரிரு நாட்களுக்குள் வேட்பாளர்கள் தேர்வு செய்யப் படுவர் என அந்த மாவட்டங் களுக்கான திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago