கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி மலர். இத்தம்பதிக்கு 20 நாட்களுக்கு முன் 3-வது குழந்தை பிறந்தது.
எனவே, தாத்தையங் கார்பேட்டை அருகேயுள்ள கீரிப்பட்டியில் தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் மலர் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் பக்கத்து வீட்டுச் சிறுவர்களுடன் விளையாடச் சென்ற இவரது 2-வது குழந்தையான ஜெயயை(3) நீண்டநேரமாகக் காணவில்லை. கடைசியாக வண்ணான்குட்டை பகுதிக்கு சென்றதாகத் தெரிய வந்ததால், குட்டையில் இறங்கித் தேடியபோது, அதிலிருந்து ஜெய உடல் மீட்கப்பட்டு, துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்தபோது, ஜெய இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago