திருநெல்வேலி மாவட்டம் கூட்டப்புளியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டது. ஊருக்குள் கடல் நீர் புகுந்தது. அலையின் சீற்றம் அதிகமாக இருந்தது. கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப் பட்டுவிட்டன. மேலும் சில படகுகள் சேதமடைந்து கடலில் மிதந்துகொண்டு இருந்தன. அவற்றை மீனவர்கள் மீட்டனர். மீன்வளத் துறை அதிகாரிகள் மற்றும் வட்டாட்சியர் ஜேசுராஜன் உள்ளிட்டோர் சென்று பார்வை யிட்டனர். சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு கூட்டப்புளி பகுதிக்கு சென்று, பாதிப்பு ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டு, மீனவர்களுக்கு ஆறுதல் கூறினார். செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “கூட்டப்புளியில் மீனவர்களின் நீண்ட கால கோரிக்கையான 1,100 மீட்டர் நீளத்தில் தூண்டில் வளைவு ஏற்படுத்த ரூ.47 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்க ஏற்பாடு செய்யப்படும். முதல்வர் உத்தரவின்பேரில் உடனடியாக நிதி விடுவிக்கப்பட்டு தூண்டில் வளைவு அமைக்கப்படும்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago