அஞ்சல் அட்டை எழுதி பிரதமருடன் கலந்துரையாடும் வாய்ப்பு : பள்ளி மாணவர்களுக்கு அஞ்சல்துறை அழைப்பு

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் மு.பொன் னையா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்தியாவின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு அஞ்சல் அட்டை மூலம் இந்திய கல்வித்துறை பிரச்சாரம் அறிவித்துள்ளது. அதன்படி அஞ்சல் அட்டை பிரச்சாரம் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. வரும் 20-ம் தேதி வரை நடைபெறும் இப்பிரச்சாரத்தில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து பள்ளி மாணவர்களும் 50 பைசாவுக்கு அஞ்சல் அட்டை வாங்கி பங்கு பெறலாம்.

‘2047-ம் ஆண்டில் எனது பார்வையில் இந்தியா', 'போற்றப் படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள்' ஆகிய தலைப்புகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அஞ்சல் அட்டையில் எழுதி, அதனை மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளி ஆசிரியரிடம் ஒப்படைக்கலாம்.

இந்திய தபால்துறை அனைத்து பள்ளிக்கூடங்களிலும் மாணவ, மாணவியர் ஒப்படைத்த அஞ்சல் அட்டைகளை சேகரித்து பிரதமருக்கு அனுப்பி வைக்கும். சிறந்த 10 கருத்துக்களை எழுதிய பள்ளி குழந்தைகள் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடும் வாய்ப்பை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்