வேலூர் மாவட்டத்துக்கு கடந்த ஒரு வாரத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த - 42 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிப்பு : மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தகவல்

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்துக்கு கடந்த ஒரு வாரத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள 42 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி கண் காணித்து வருவதாக மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் 50 படுக்கைகள் கொண்ட ‘ஒமைக்ரான்’ வார்டு தொடங் கப்பட்டுள்ளது. கரோனா தடுப்புப் பணிகளை விரைவு படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, வேலூர் மாநகராட்சியில் 24 மணி நேரமும் செயல்படும் கரோனா கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர், அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கரோனா தொற்று எண்ணிக்கை அதிகமாக இருந்ததாக கூறி மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில், அதிகமானவர்கள் சி.எம்.சி.க்கு சிகிச்சை வந்த வெளி மாநிலத் தவர்கள்.

சி.எம்.சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் வெளி மாநிலங் களைச் சேர்ந்தவர்கள் தங்களது ஆதார் முகவரியை பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல், சிகிச்சைக்கு வரும் வெளி மாநில நோயாளிகள் கரோனா தொற்று இல்லை என சான்று வைத்திருந்தால் மட்டுமே விடுதிகளில் தங்க அனுமதிக்க வேண்டும். இது தொடர்பாக விரைவில் தங்கும் விடுதி உரிமை யாளர்களின் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் இதுவரை முதல் டோஸ் தடுப்பூசியை 73 சதவீதம் பேரும், இரண்டாவது டோஸ் தடுப்பூசியை 40 சதவீதம் பேரும் செலுத்திக்கொண்டுள்ளனர். அடுத்த வாரத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 76 சதவீதத்தை எட்டி விடும். மாவட்டத்தில் 2.25 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது.

கடந்த நவம்பர் 30-ம் தேதியில் இருந்து வெளிநாடுகளில் இருந்து வேலூருக்கு 71 பேர் வந்துள்ளனர். இவர்களில், 42 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள் ளனர். இவர்களுக்கு இரண்டாவது தவணை கரோனா பரிசோதனை வரும் 8-ம் தேதி நடத்தப்பட உள்ளது. 12 பேர் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங் களைச் சேர்ந்தவர்கள் என்பதால் அந்த மாவட்டங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 14 பேரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது’’ என்றார்.

அப்போது, வேலூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்கு நர் பானுமதி, மாநகர நல அலுவலர் மணிவண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்