சேலம் பெரியார் பல்கலை.யில் நாளை பட்டமளிப்பு விழா : தமிழக ஆளுநர் கே.என்.ரவி பங்கேற்பு

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் நாளை (6-ம் தேதி) 20-வது பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது.

விழாவுக்கு, பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என். ரவி தலைமை வகிக்கிறார். பெரியார் பல்கலைக்கழக இணைவேந்தரும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி, பெங்களூரு இந்திய அறிவியல் கழக இயக்குநர் கோவிந்தன் ரங்கராஜன், பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தர் ஜெகநாதன், பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல், தேர்வாணையர் கதிரவன் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

விழாவில், முதுமுனைவர் பட்டம் பெறும் 6 பேர், முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்துள்ள 575 மாணவர்கள், பெரியார் பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் ஆய்வியல் நிறைஞர், முதுகலை மற்றும் இளங்கலைப் பாடங்களில் முதலிடம் பிடித்த 196 மாணவர்களுக்கு தங்கப் பதக்கத்துடன், பட்டச் சான்றிதழை ஆளுநர் வழங்கவுள்ளார்.

மேலும், கடந்த 2019-2020 மற்றும் 2020-2021-ம் கல்வியாண்டில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு பட்டங்களையும், முதுகலை பாடப்பிரிவில் முதலிடம் பிடித்த 55 மாணவர்கள், இளங்கலை பாடப்பிரிவில் 4 பேர், இணைவுபெற்றக் கல்லூரிகளின் முதுகலை பாடப்பிரிவில் 61 மாணவர்கள், இளநிலை பாடப்பிரிவில் 76 மாணவர்கள் ஆகியோருக்கு தங்கப் பதக்கத்துடன், பட்டச்சான்றிதழையும் ஆளுநர் வழங்கி பேசுகிறார்.

பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் பெரியார் பல்கலைக்கழக இணையதளமான www.periyaruniversity.ac.in என்ற முகவரியில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்