கொங்கணாபுரம் சந்தையில் ரூ.2.5 கோடிக்கு வர்த்தகம் :

By செய்திப்பிரிவு

எடப்பாடி அடுத்த கொங்கணாபுரத்தில் நேற்று நடந்த கால்நடை சந்தையில் ரூ.2.5 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

எடப்பாடி அடுத்த கொங்கணாபுரத்தில் நேற்று வாராந்திர கால்நடை சந்தை கூடியது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து கால்நடை வளர்ப்பவர்கள் 3,500 ஆடுகள், 1,500 பந்தய சேவல்கள் மற்றும் கோழிகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இதில், 10 கிலோ வரையுள்ள ஆடுகள் ரூ.4,600 முதல் ரூ.5,400 வரையும், 20 கிலோ வரையுள்ள ஆடுகள் ரூ.9,200 முதல் ரூ.11,500 வரையும், குட்டி ஆடுகள் ரூ.2,500 முதல் ரூ.3,000 வரை விற்பனையானது. பந்தய சேவல்கள் குறைந்தபட்சம் ரூ.ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.4,000 வரையும், வளர்ப்புக் கோழிகள் ரூ.100 முதல் ரூ.1,000 வரை விற்பனை யானது.

கால்நடைகளை தவிர சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து விவசாயிகள் 100 டன் காய்கறிகள், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயத்தை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதுதொடர்பாக கால்நடை வியாபாரிகள் கூறும்போது, “நேற்றைய சந்தையில் ரூ.2.5 கோடிக்கு கால்நடைகள் மற்றும் காய்கறிகள் வர்த்தகம் நடைபெற்றது” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்