சேலத்தில் வெறி நாய் கடித்ததில் கடந்த இரு நாட்களில் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
சேலம் மாநகர பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றித்திரிந்து வருகின்றன. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இரவு நேரங்களில் சுற்றித்திரியும் நாய்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில், மாநகராட்சி 12-வது கோட்டம் ஜான்சன்பேட்டை அரசு போக்குவரத்துக் கழக பணிமனைப் பகுதியில் நேற்று முன்தினம் வெறி நாய் அப்பகுதியில் சென்றவர்களை துரத்திச் சென்று கடித்தது. இதில், 6 பேர் பலத்த காயம் அடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
தொடர்ந்து நேற்று அதே நாய் அவ்வழியாக சென்ற 5 பேரை கடித்தது. இதனிடையில், அந்த வெறி நாய் தொடர்ந்து அப்பகுதியில் சுற்றி வருவதால், அதை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். சேலம் ஆட்சியர் அலுவலக பகுதியில் கடந்த சில நாட்களாக சுற்றிய தெரு நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து கருத்தடை சிகிச்சை செய்தனர். இதேபோல, மாநகர பகுதி முழுவதும் சுற்றும் தெரு நாய்களை பிடித்து கருத்தடை சிகிச்சை அளித்து தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago