மதுரை விமான நிலையத்தில் - உள்நாட்டு பயணிகளுக்கும் ஒமைக்ரான் பரிசோதனை :

By செய்திப்பிரிவு

மதுரை விமான நிலையத்தில் உள்நாட்டுப் பயணிகளுக்கும் ஒமைக்ரான் பரிசோதனை செய் யப்படுகிறது.

தற்போது ஒமைக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் கர்நாடகாவில் 2 பேர், குஜராத்தில் ஒருவர் என 3 பேருக்கு இத்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளை எல்லையோர மாவட்டங்களில் கண்காணிக்க சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

ஒமைக்ரான் பாதிப்பு தீவிரமாக உள்ள 11 நாடுகளில் இருந்து விமானங்களில் வருவோருக்கு விமான நிலையங் களில் தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது. தொற்று இல்லாவிட்டாலும் அவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் ஒமைக்ரான் பரிசோதனைக்காக மாநில சுகாதாரத் துறை ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

மதுரை விமான நிலையத்தில் வெளிநாட்டுப் பய ணிகளுக்கு மட்டுமின்றி உள்நாட்டுப் பயணிகளுக்கும் கரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ஸ்ரீலங்கா, துபாயில் இருந்து மட்டுமே மதுரைக்கு நேரடியாக விமானங்கள் வருகின்றன. மற்ற வெளிநாடுகளில் இருந்து நேரடி விமானங்கள் மதுரை வருவதில்லை. இருப்பினும் அனைத்துப் பயணிகளையும் கண்காணிக்கிறோம். இதுவரை யாருக்கும் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்