தமிழகத்தின் ஒரே ஒரு ஹோமியோபதி அரசு மருத்துவக் கல்லூரி மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்களின் நிலைமை மோசமாக இருக்கிறது.
1972-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரியை கட்டிய பிறகு இது வரை புனரமைக்கவில்லை. கல்லூரி விடுதிகள் இடிந்து விழும் நிலையில் இருந்ததால் பூட்டப்பட்டன.
இந்தக் கல்லூரிக் கட்டிடம் ஆங்காங்கே விரிசல் விட்டு நீர் கசிகிறது. மழைக் காலத்தில் கல்லூரி வளா கத்தில் தெப்பம் போல தண்ணீர் தேங்குகிறது. கழிவறைகள் முறையான பராமரிப்பு இல்லை.
இதைக் கண்டித்து மாணவர்கள் சில நாட்களுக்கு முன்பு வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து இக்கல்லூரியின் நிலை குறித்து தெரியவந்ததும் மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் நேற்று கல்லூரியில் ஆய்வு செய்தார்.
கல்லூரி முதல்வர், பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் பேசி சேதமடைந்த கட்டிடங்களை சீரமைக்கவும், கல்லூரி வளாகத்தில் தண்ணீர் தேங்குவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அனீஷ்சேகர் உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago