கடன் வழங்குவதாக வரும் செயலிகளை தவிருங்கள் : சைபர் கிரைம் காவல் துறை அறிவுரை

By செய்திப்பிரிவு

கடன் வழங்குவதாக வரும் செயலிகளை தவிர்த்து விடுங்கள் என சைபர் கிரைம் காவல் துறை அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து மதுரை சைபர் கிரைம் காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறி வங்கி கணக்கு எண், ஓடிபி எண்ணை யாராவது கேட்டால் வழங்கக் கூடாது. முகநூலில் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டாம். தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு டவர் அமைக்க வேண்டி வரும் எந்த குறுந்தகவலையும் நம்ப வேண்டாம். லோன் தொடர்பான செயலிகளை தவிர்த்து விடுங்கள். ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட வேண்டாம்.

இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளத்தில் தனிப்பட்ட புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய வேண்டாம். மொபைல், இ-மெயில்-க்கு தெரியாதவர்களிடமிருந்து வரும் இணைப்புகளை தொட வேண்டாம். போலியான வேலைவாய்ப்பு வெப்சைட்டுகளை நம்பி ஏமாற வேண்டாம். மொபைல் எண்ணுக்கு பரிசு தொகை கிடைத்திருப்பதாக வரும் எந்தவொரு செய்தியையும் நம்ப வேண்டாம். குழந்தைகளை இணையதள விளையாட்டுகளை விளை யாட அனுமதிக்க வேண்டாம்.

நகைக்கடை மற்றும் ஜவுளிக்கடைகளில் தனிப்பட்ட தகவல்களை அளிக்க வேண்டாம். சைபர் குற்றம் தொடர்பாக அவசர உதவிக்கு 155260 என்ற எண்ணையோ அல்லது காவலன் எஸ்ஓஎஸ் செயலியையோ பயன்படுத்தலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்