மதுரையில் நேற்று பெய்த கனமழையால் பள்ளி, கல் லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தெருக்கள், குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய தண்ணீரால் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டன.
நேற்று காலை 6 மணியளவில் மதுரை மாவட்டத்தின் பெரும் பாலான பகுதிகளில் மழை பெய்தது. 6.45 மணி வரையில் பெய்த மழை சிறிது நேரம் நின் றது. மீண்டும் காலை 7 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை 45 நிமிடங்கள் பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மதியமும் மீண்டும் மழை பெய்தது. அடுத் தடுத்து பெய்த மழையால் ஏற் கெனவே நிரம்பியிருந்த கண் மாய்களிலிருந்து அதிகளவில் வெளியேறிய தண்ணீர் கூடல் நகர், திருப்பாலை உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு பகுதி களுக்குள் நுழைந்தது. புறநகர் பகுதிகளில் ஏற்கெனவே பாதாள சாக்கடைக்காக குழிகள் தோண் டப்பட்ட நிலையில், மழைநீர் தெப்பம்போல் பல தெருக்களில் தேங்கியதால் மக்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர்.
மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பல தெருக்களில் தண் ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனப் போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டது.
மதுரை மாடக்குளம் கண்மாய் நிரம்பியுள்ள நிலையில், அதி லிருந்து வெளியேறும் தண்ணீர் நகர்ப் பகுதியில் புகுந்தது. குறிப் பாக எல்லீஸ் நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அங் குள்ள வாய்க்கால்களில் மக்கள் மீன்பிடித்து வருகின்றனர்
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago