20 வகையான பொருட்களுடன் பொங்கல் பரிசு தொகுப்பு :

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4.41 லட்சம் குடும்ப அட்டைதாரர் களுக்கு 20 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வேலூர் மாவட்டத்தில் 4 லட்சத்து 41 ஆயிரத்து 190 குடும்ப அரிசி அட்டைகள், இலங்கை தமிழர் முகாம்களில் 365 அரிசி குடும்ப அட்டைகள் என மொத்தம் 4 லட்சத்து 41 ஆயிரத்து 555 குடும்ப அட்டைதாரர்களுக்கு வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 20 வகையான பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ வெல்லம், தலா 50 கிராம் வீதம் முந்திரி, திராட்சை, 10 கிராம் ஏலக்காய், 500 கிராம் பாசிப்பருப்பு, தலா 100 கிராம் வீதம் நெய், மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், 50 கிராம் மிளகு, 200 கிராம் புளி, 250 கிராம் கடலை பருப்பு, 500 கிராம் உளுத்தம் பருப்பு, 1 கிலோ ரவை, 1 கிலோ கோதுமை, 500 கிராம் உப்பு அடங்கிய ஒரு துணிப்பை வழங்க உள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்