வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங் களில் உள்ள அமைப்பு சாராா தொழி லாளர்கள் மத்திய அரசின் சமூக பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற இலவசமாக பதிவு செய்துகொள்ளலாம் என வேலூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஞானவேல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘வேலூர், ராணிப் பேட்டை மாவட்டங்களில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களை இந்திய அரசால் தொடங்கப்பட்டுள்ள eSHRAM என்ற தளத்தில் பதிவேற்றம் செய்ய மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான திட்ட அமலாக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங் களில் உள்ள தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்கள், சுய தொழில் செய்பவர்கள், மகளிர் குழுவினர், தெரு வியாபாரிகள், ரிக் ஷா இழுப்பவர்கள், கட்டுமான தொழிலாளர்கள், வீட்டு பணியாளர்கள், செங்கல் சூளை தொழிலாளர்கள் மற்றும் இ.எஸ்.ஐ., பி.எப்., திட்டத்தில் உறுப்பினர் அல்லாதவர்கள் இந்த திட்டத்தில் சேரலாம்.
இதன் மூலம், மத்திய அரசின் சமூக பாதுகாப்பு திட்டங்களில் பயன் பெறலாம். எனவே, மாவட்டங்களில் உள்ள அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களும் அருகில் உள்ள பொது சேவை மையங்களில் கட்டணம் இல்லாமல் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் வங்கிக்கணக்கு எண்ணுடன் பதிந்து பயன் பெறலாம்’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago