பள்ளம் ஏற்பட்ட வீட்டை செங்கை ஆட்சியர் ஆய்வு :

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் ஒரு வீட்டில் மழை வெள்ளத்தால் மண் உள்ளே இறங்கியதால் பள்ளம் ஏற்பட்டது. அந்த இடத்தை மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஆய்வு செய்தார்.

மேலும் காஞ்சிபுரம் மகாலட்சுமி நகரில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு மழைநீர் வடிகால்களை எவ்வாறு சீரமைப்பது என்பது தொடர்பாகவும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், காட்டாங்கொளத்தூர் ஒன்றியக் குழுத் தலைவர் உதயா கருணாகரன் ஆகியோர் இந்த ஆய்வின்போது உடன் இருந்தனர்.

பின்னர், காரணை புதுச்சேரி ஊராட்சியில் உள்ள ஜெயேந்திர சரஸ்வதி நகரில் மழைநீர் வடிகால் மூலம் வெள்ளநீர் வெளியேறுவதை ஆய்வு செய்தார். மழைநீர் வெளியேறுவதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்