கற்றல் குறைபாடு குழந்தைகளுக்கு வண்ணம் தீட்டும் பயிற்சி :

By செய்திப்பிரிவு

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு என்.ராமவாரியர் ஆயுர்வேத மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் மதுரை விளாச்சேரி ஏவிஎன் ஆரோக்யா மருத்துவமனையில் கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு வண்ணம் தீட்டும் பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஏவிஎன் ஆரோக்யா நிர்வாக இயக்குநரும் முதுநிலை மருத்துவருமான ரமேஷ் ரா.வாரியர் பேசும்போது, கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகளைக் கனிவுடனும், தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் மாற்ற அவர்களை தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும் என்றார்.

சிறப்பு விருந்தினராக யு.சந்திரசேகர் (நிர்வாக அறங்காவலர் மதுரை குரூப் லிவ்விங் பவுண்டேஷன்) சிறப்புக் குழந்தைகளின் குழுத் தலைவர் பேசுகையில், சிறப்புக் குழந்தைகளுக்கு தனித்திறமைகள் உள்ளன. அவற்றைக் கண்டறிந்து மேம்படுத்த பயிற்சி் அளிக்க வேண்டும். பெற்றோரும் தனி கவனமெடுத்து சமுதாயத்தில் தன்னம்பிக்கை மிக்கவர்களாக சிறப்புக் குழந்தைகளை உருவாக்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் மருத்துவமனை இயக்குநர் தேவி ராஜீவ் வாரியர், மருத்துவக் கண்காணிப்பாளர் பிஜீ மாதவன், மருத்துவமனை தலைமை அதிகாரி யு.பு.ராஜேந்திர நாயர், விற்பனைத் தலைமை அதிகாரி சஞ்சய் மற்றும் மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்