கூடுதல் வசதிகளுடன் மதுரை காவலன் செயலி : எஸ்.பி. உத்தரவால் செயல்பாட்டுக்கு வந்தது

By செய்திப்பிரிவு

மதுரை மாவட்டத்தில் பூட்டியுள்ள வீடுகளில் நடக்கும் திருட்டுகளைத் தடுக்க ‘மதுரை காவலன்’ செயலி கடந்த 2 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், இச்செயலி மேம்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட எஸ்பி வீ.பாஸ்கரன் கூறியதாவது:

மதுரை நகரில் பெரும்பாலும் குடியிருப்புவாசிகள் வெளியூர் செல்லும் போது, பூட்டிய வீடுகளை அந்தந்த காவல் நிலைய போலீஸார் கண்காணிக்கும் வகையில், காவலன் செயலியில் ‘க்யூஆர் குறியீடு’ வசதி சேர்க் கப்பட்டுள்ளது.

இதன்மூலம் காவலர்கள் வீட்டின் உரிமையாளருக்கு கண்காணிப்பு எஸ்எம்எஸ் அனுப்ப வசதி செய் யப்பட்டுள்ளது.

அந்த ‘க்யூஆர் குறியீட்டை’ வீட்டின் உரிமையாளர் தனது வீட்டின் முன்போ அல்லது தான் வசிக்கும் பகுதியில் ஏதேனும் பொது இடத்தில் ஒட்டி விட்டால், அந்த பகுதியில் காவலர்கள் ரோந்து செல்லும்போது, அந்த ‘க்யூஆர்’ குறியீட்டை ஸ்கேன் செய்து, தகவலை காவல் கட்டுப் பாட்டு அறைக்கும், சம்பந்தப்பட்ட நபருக்கும் அனுப்பலாம்.

இதற்கென 44 இருசக்கர வாக னங்கள் ஒதுக்கப்பட்டு, அதிக போலீஸார் ரோந்து சென்று பூட்டிய வீடுகளை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்