`ஒன்வே டாக்ஸி' இயக்கத்தால் பாதிப்பு - வாடகை வாகன ஓட்டுநர்கள் போராட்டம் :

By செய்திப்பிரிவு

மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே அனைத்து வாடகை சுற் றுலா வாகன ஓட்டுநர்கள், உரி மையாளர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

அப்போது நிகழ்ச்சி ஒன்றில் பங் கேற்றுவிட்டு ஆட் சியர் அலுவலகம் வந்த அமைச்சர் பி.மூர்த்தியின் காரை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற் றுகையிட்டனர்.

அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர், கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுப் பதாக உறுதியளித்தார்.

இதையடுத்து போராட்டத்தை விலக்கிக்கொண்டனர்.

பின்னர் சங்க நிர்வாகிகள் காளி முத்து, ராமநாதன் உள்ளிட்டோர் கூறியது: சுற்றுலா வாகனங்கள் இயக்குவதன் மூலம் பலநூறு குடும்பங்கள் பிழைக்கின்றன. மதுரையில் `ஒன்வே டாக்ஸி' வாகனங்களை அதிகளவில் இயக்குகின்றனர். ஒத்தக்கடை அருகே ஏராளமான வெளி மாநில வாகனங்ளை நிறுத்தி வைத்துள்ளனர்.

இவை மதுரை நகருக்குள் வந்து பயணிகளை ஏற்றிச் செல் கின்றன.

இதில் எங்களின் தொழில் கடுமையாகப் பாதிப்பதை விளக்கிப் பேச்சு நடத்த எங்கள் சங்கத்தினர் ஒத்தக்கடை சென் றனர்.

அங்கு `ஒன்வே டாக்ஸி' வாக னங்களை நிறுத்தியிருந்தோரைக் கலைந்து செல்லும்படி கூறினோம்.

ஆனால் எங்கள் மீது தவறான புகார் அளித்ததன் பேரில் 5 பேரை போலீஸார் கைது செய்தனர். புகார் மீது முறையாக விசாரணை நடத்தாமல் அவசர கதியில் போலீஸார் செயல்பட்டுள்ளனர். ஓட்டுநர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும், என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்