சேலத்தில் பட்டா திருத்த சிறப்பு முகாம் 1659 மனுக்கள் மீது உடனடி தீர்வு :

‘சேலம் மாவட்டத்தில் கணினி வழி பட்டா சிறு திருத்த சிறப்பு முகாம் தொடங்கப்பட்ட ஒரு மாத காலத்தில் 1,659 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது,’ என ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் கார்மேகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

சேலம் மாவட்டத்தில் கணினி வழி பட்டா சிறு திருத்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் வட்டங்களிலும் கடந்த அக்டோபர் 29-ம் தேதி முதல் கடந்த 1-ம் தேதி வரை 9 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 6,473 மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்து, அதில் 1,659 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது.

மீதமுள்ள மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் வாரந்தோறும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் கணினி வழி பட்டா சிறு திருத்த சிறப்பு முகாமினை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்