போதைப்பொருள் விநியோகத்தை தடுக்க அரசு சிறப்பு படை அமைக்க வேண்டும் : பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக சேலத்தில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் எப்போது அறிவித்தாலும் தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது. தமிழில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தராமல் தமிழை வைத்து திமுக அரசியல் செய்கிறது. திருவள்ளுவர் பிறந்த நாள் மற்றும் தமிழ் புத்தாண்டு தேதியை மாற்ற திமுக அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?. பாரம்பரியமாக கடைபிடித்து வரும் நடைமுறையை மாற்றுவதற்காக திமுகவிற்கு மக்கள் வாக்களிக்கவில்லை.

இளைஞர்கள் தடம் மாறி செல்ல தமிழகம் போதை மாநிலமாக மாறி வருவதே காரணம் . மாநிலத்தின் தலைநகரான சென்னையில் சர்வ சாதாரணமாக போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. எனவே, தமிழக முதல்வர் சிறப்பு படை அமைத்து போதைப் பொருள் விநியோகத்தை தடுத்து இளைஞர்களை காக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்