கட்டுமான தொழிலாளர்கள் மறியல் :

By செய்திப்பிரிவு

தென்காசி பழைய பேருந்து நிலையம் அருகில் மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சங்க மாவட்டத் தலைவர் மாதவன் தலைமை வகித்தார்.

சிஐடியூ தென்காசி மாவட்டச் செயலாளர் வேல்முருகன் போராட்டத்தை தொடங்கிவைத்தார்.

கட்டுமான தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும். கட்டுமான தொழில் மற்றும் கட்டுமான தொழிலாளர்களின் நலவாரிய சட்டங் களில் தேவையின்றி திருத்தம் செய்யக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட 48 பேரை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்