சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத் தறிகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.
நூல் விலை உயர்வு மற்றும் ஜவுளிக்கான ஜிஎஸ்டி உயர்வை கண்டித்து சங்கரன்கோவில் தேரடி திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்குந்தர் முன்னேற்ற சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க மாநில துணைத் தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். செங்குந்தர் முன்னேற்ற சங்க தலைவர் கந்தவேல் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago