கட்டுமான தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் :

By செய்திப்பிரிவு

கட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்கும் வகையில் ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் கல்லுடைக்கும் மற்றும் கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தினர் (சிஐடியு) நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதிய பேருந்து நிலையம் அருகே சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.தர் தலைமையில் மறியலில் ஈடுபட்ட சிஐடியு மாவட்ட பொதுச் செயலாளர் சி.அன்புமணவாளன், தையல் தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் சி.மாரிக்கண்ணு உட்பட 44 பேரை நகரக் காவல் நிலையத்தினர் கைது செய்தனர்.

கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு கட்டுமான தொழிலாளர் சங்கம்(சிஐடியு) சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடைபெற்றது. போராட்டத்துக்கு, மாவட்ட துணைத் தலைவர் வி.கந்தசாமி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம், செயலாளர் சி.முருகேசன், கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் சி.ஆர்.ராஜா முகமது ஆகியோர் பேசினர். தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்ட 33 பெண்கள் உட்பட 59 பேரை கரூர் நகர போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்