கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனா ளிகளுக்கு ஏற்ற வடிவமைப்பைக் கொண்ட வீடுகளுடன் ‘விடியல் நகர்' அமைக்கும் பணிகள் விரை வில் தொடங்கும் என மாநில மின் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்துக்கு வரும் மாற்றுத்தி றனாளிகள் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, ஆட்சியர் அலுவலகத் துக்கு வருவதற்கு சிரமப்படுவதை அடுத்து, மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக ஒரு பேட்டரி காரை மாநில மின் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி வழங்கி உள்ளார்.
இதையடுத்து, ஆட்சியர் அலுவ லக நுழைவு வாயில் முன்பு ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த பேட்டரி கார் சேவையை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடங்கிவைத்தார். பின்னர், ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற விழாவில், மாற்றுத்திறனா ளிகள் 136 பேருக்கு ரூ.22 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, அமைச்சர் பேசியது:
கரூர் மாவட்டம் மின்னாம் பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சி யில் பார்வையற்ற மாற்றுத்திறனா ளிகள் யாருடைய உதவியுமின்றி தாங்களே வசிக்கும் வகையில் 'விடியல் வீடு' என்ற பெயரில் வீடுகள் கட்டும் பணி தொடங்கி யுள்ளது. இப்பணி 2 மாதங்களில் முடிவடைந்து, வீடுகள் பயன் பாட்டுக்கு தயாராகிவிடும்.
இதேபோல, கரூர் மாவட்டத்தில் ‘விடியல் நகர்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, வீடுகள் தேவை என விண்ணப்பிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடுகள் கட்டி வழங்கப்படும். அந்த வீடுகளில் யாருடைய உதவியுமின்றி மாற்றுத் திறனாளிகள் தனியாக வசிக்கக்கூடிய வகையில் வடிவ மைப்புகள் மாற்றி அமைக்கப்படும். இந்த ‘விடியல் நகர்’ அமைக்கும் பணிக்காக பிச்சம்பட்டி, மண வாடி ஆகிய 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு இடம் விரைவில் தேர்வு செய் யப்பட்டு, ‘விடியல் நகர்’ அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்றார்.
முன்னதாக, திண்டுக்கல் மாவட்டம் குடகனாறு அணைக்கு ஆட்சியர் த.பிரபுசங்கருடன் சென்று ஆய்வு செய்த அமைச்சர் செந்தில்பாலாஜி, அங்கிருந்து வெள் ளியணைக்கு உபரிநீர் கொண்டு செல்லப்படுவதை பார்வையிட்டார். பின்னர், அவர் கூறியது:
குடகனாறு அணையில் உள்ள 5 மதகுகளை சீரமைத்தால் 27 அடிக்கு நீரைத் தேக்க முடியும். இங்கிருந்து வெள்ளியணைக்கு தற்போது 100 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து வெள்ளியணை குளத்துக்கு 52 கி.மீ தொலைவுக்கு செல்லும் வாய்க்கால் 110 கனஅடி தண்ணீரை மட்டுமே கொண்டு செல்லும் வகையில் உள்ளது. இதில், 26 கி.மீ தொலைவுக்கு மட்டுமே சிமென்ட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கால்வாயில் 200 கனஅடி தண்ணீர் செல்லும் வகையில், மீதியுள்ள தொலைவுக்கு சிமென்ட் தளம் அமைக்கும் பணிகளை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வரு வாய் அலுவலர் எம்.லியாகத், எம்எல்ஏக்கள் அரவக்குறிச்சி பி.ஆர்.இளங்கோ, கிருஷ்ணராய புரம் க.சிவகாமசுந்தரி உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago