ஒமைக்ரான் வைரஸை எளிதாக எடுத்துக்கொள்ள கூடாது : ஆட்சியர் பா.முருகேஷ் அறிவுரை

By செய்திப்பிரிவு

புதிய வகை ஒமைக்ரான் வைரஸை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என ஆட்சியர் பா.முருகேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஒமைக்ரான் எனும் புதிய வகை வைரஸ் தொற்று, வெளிநாடுகளில் பரவி வருகிறது. தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸை கண்டறியப்படவில்லை. இந்த வைரசை நாம், எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். இரண்டு கட்டமாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் சமூக இடைவெளியுடன் குறைந்த அளவு மக்கள் கூடுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நமக்கு தொற்று வராது என அலட்சியமாக இல்லாமல், முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 20 சதவீதத்துக்கும் குறைவான மக்கள் மட்டுமே முகக்கவசம் அணிந்துள்ளதால், நோய் தொற்று பரவ அதிகம் வாய்ப்பு உள்ளது.

இனிவரும் நாட்களில், அனை வரும் முகக்கவசம் அணிந்து, வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்