வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஏழ்மை நிலையில் உள்ள பெண்களுக்கு 100% மானியத்தில் 5 ஆடுகள் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர்கள் குமாரவேல் பாண்டியன் (வேலூர்), பாஸ்கர பாண்டியன் (ராணிப்பேட்டை)ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக 2021-22-ம் ஆண்டுக்கான ஊரகப் பகுதிகளில் ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்களுக்கு 100% மானியத்தில் 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கி பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
100 பயனாளிகள் தேர்வு
ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு 100 பயனாளிகள் வீதம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பங்களை அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில் பெற்று உரிய விவரங்களுடன் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
நிலம் இருக்க கூடாது
பயனாளிகள் பெயரிலோ அவரது குடும்பத்தினர் பெயரிலோ நிலம் இருக்கக்கூடாது. தற்போது, சொந்தமாக ஆடு, மாடுகள் வைத் திருக்கக்கூடாது. உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பில் உள்ளவர்களும் அவரது குடும்ப உறுப்பினர்களும் பயனாளிகளாக இருக்கக்கூடாது.
கிராமத்தில் வசிப்பவர்களுக்கு...
மேலும், விலையில்லா கறவை பசுக்கள், ஆடுகள் வழங் கும் திட்டம் மற்றும் தேசிய கால்நடைகள் இயக்கம், ஊரக ஆடு வளர்ப்பு திட்டத்தில் பயன்பெற்ற பயனாளிகளாக இருக்கக்கூடாது. கிராம ஊராட்சியில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். திட்டத்தின் பயனாளிகளில் 29% ஆதிதிராவிடராகவும், 1% பழங் குடியினராக இருக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago