பல்வேறு இடங்களில் ஆய்வுக்கு சென்ற - விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிக்கு கரோனா :

By செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியாக பணியாற்றி வருபவர் கிருஷ்ணப்பிரியா. இவர் கடந்த சில வாரங்களாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு பள்ளிகளை சுற்றி சூழ்ந்திருந்த தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். மேலும் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் பயிற்சி அளிக்க உள்ள கருத்தாளர்களுக்கும், இத்திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கலைக்குழுவினர்களுக்கும் பயிற்சி அளித்தார்.

இந்நிலையில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி கிருஷ்ணப்பிரியா நேற்று முன்தினம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கரோனாபரிசோதனை செய்து கொண்டார்.மருத்துவ பரிசோதனை அறிக் கையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சுகாதாரத் துறை அறிவுரைப்படி அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவரது குடும்பத்தினரிடமும் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்