எலவனாசூர்கோட்டை ஊராட்சியில் - அறிவிப்பின்றி நடத்தப்பட்ட கிராம சபைக் கூட்டம் :

By செய்திப்பிரிவு

எலவனாசூர்கோட்டை ஊராட்சி யில் கிராம மக்களுக்கு அழைப்பின்றி வார்டு உறுப்பினர்களை மட்டும் கொண்டு கிராமசபைக் கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பிடாகம் எனும் எலவனாசூர்கோட்டை ஊராட்சியில் நேற்று தலைவர் நந்தகுமார் தலைமையில் கிராம வளர்ச்சிப் பணிகள் குறித்த கிராம சபைக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றதாக கூறப்படுகிறது. கிராம மக்களுக்கு தண்டோரா மூலமோ, தற்போதைய நவீன தொழில்நுட்பத் திறன் கொண்ட கருவி மூலமோ அறிவிப்புச் செய்யாமல் ரகசியமாக நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கிராம வளர்ச்சிப் பணிகள் என்ற போர்வையில், ஒவ்வொரு வார்டுக்கும் ஒதுக்கப்படும் தொகை, அதில் வார்டு உறுப்பினர்களுக்கான பங்கு குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஊராட்சி செயலர் முகமதுஜின்னாவிடம் கேட்டபோது, "அனைத்து வார்டு உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவித்து, மக்களை அழைத்து வரச் சொல்லியிருந்தோம். சிலர் வந்திருந்தனர்.

முறையாக அறிவிப்புக் குறித்து தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்