தமிழகத்தில் உரத் தட்டுப்பாட்டால் விவசாய பணிகள் பாதிப்பு : தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் கண்டனம்

By செய்திப்பிரிவு

கடலூரில் சேதமடைந்த பயிர்க ளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். சேதமடைந்த பயிர்களை முழுமையாக கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்கிட கோரி கடலூரில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவன், கரும்பு விவசாயி சங்க நிர்வாகிகள் தென்னரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் அமர்நாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியது:

கடும் மழையால் தமிழகத்தில் சுமார் 5 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் பாதிக்கப்பட்ட நிலத்தின் பரப்பளவை அரசு மிகக்குறைவாக அறிவித்து வருகிறது. இதுவரை தமிழக அரசு நிவாரணத் தொகையை அறிவிக்காதது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது உரத்தட்டுப்பாடு விவசாயிகளின் அன்றாட பணியை பாதித்துள்ளது.தமிழக அரசு, உரிய நேரத்தில் உரத்தை இறக்குமதி செய்து, அதனை இருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்காதது தான் தட்டுப்பாடுக்கு காரணம்.தமிழக அரசு, மத்திய அரசுடன் பேசி தமிழகத்திற்கு தேவையான யூரியா, டி.ஏ.பி. உரங்களை இறக்குமதி செய்து தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்