நூறு சதவீத கரோனா தடுப்பூசி செலுத்த முயற்சி மேற்கொள்ளாத ஊராட்சி செயலாளர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோலியனூர் மற்றும் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கான கரோனா தடுப்புப்பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது ஆட்சியர் மோகன் பேசியது:
ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலாளர்கள் கரோனா தடுப்பூசி முதல் தவணை செலுத்தாத நபர்களின் வீடுகளுக்கே சென்று கரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சிறப்பாக செயல்பட்டு 100 சதவீதம் இலக்கினை எட்டும் ஊராட்சிக்கு தங்க நாணயம் பெறும் அளவிற்கு பணியாற்றிட வேண்டும். 100 சதவீதம் எட்டாத ஊராட்சி செயலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தவறான பயனாளிகள் சேர்க்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டால் தொடர்புடைய ஊராட்சி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
இக்கூட்டத்தில் ஊராட்சிகள் உதவி இயக்குநர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பொற்கொடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago