காமராசர் பல்கலைக்கழக - முன்னாள் தேர்வாணையர் மீது : லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு :

By செய்திப்பிரிவு

காமராசர் பல்கலைக்கழக முன்னாள் தேர்வாணையர் ஓ.ரவி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி முதல்வராக இருப்பவர் ஓ.ரவி. கடந்த 2017 முதல் 2020 நவம்பர் வரை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தேர்வாணையராக பணிபுரிந்தார். அவரது பணிக் காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.2,91,10,180-க்கு சொத்துகளை வாங்கி குவித்ததாக புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக மதுரை ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நேற்று முன்தினம் கருமாத்தூர் அருகிலுள்ள செல்லம்பட்டி காந்தி நகரிலுள்ள ரவியின் வீடு, அவரது மகன் பெயரிலுள்ள டிராவல்ஸ் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதற்கிடையில் ரவி மற்றும் அவரது மனைவி சுமதி மீது 5 பிரிவுகளின் கீழ் காவல் ஆய்வாளர் கண்ணன் வழக்குப் பதிவு செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்