ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக - விருதுநகர் இளைஞர் உட்பட 9 பேரிடம் ரூ.90 லட்சம் மோசடி : ரயில்வே ஒப்பந்ததாரர் உட்பட 2 பேர் தலைமறைவு

By செய்திப்பிரிவு

விருதுநகர் இளைஞர் உட்பட 9 பேருக்கு ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ரூ.90 லட்சம் மோசடி செய்ததாக ஒப்பந்ததாரர், அவரது மகனை மதுரை போலீஸார் தேடிவருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், மம்சா புரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(25). பட்டதாரியான இவர், வேலை தேடிக்கொண்டிருந்தார். இதற்கிடை யில், மயிலாடுதுறை மாவட்டம், பசுமதி அக்ரஹாரத்தைச் சேர்ந்த மணிவெங்கடகிருஷ்ணன், அவரது தந்தை நாராயணசாமி ஆகியோர் மணி கண்டனை 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடர்பு கொண்டனர்.

ரயில்வே ஒப்பந்ததாரரான மணி வெங்கடகிருஷ்ணன், நாராயணசாமி ஆகியோர் தங்களுக்குத் தெரிந்த அதிகாரிகள் மூலம் ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி னர். இதை நம்பிய மணிகண்டன், அவரது நண்பர்கள் 9 பேர் சேர்ந்து மதுரை மேலமடை சிக்னல் அருகில் உள்ள தனியார் விடுதியில் வைத்து தந்தை, மகனிடம் ரூ.90 லட்சத்தை கொடுத்தனர். அவர்கள் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை. மணிகண்டன் உள்ளிட்டோர் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்காவிடம் புகார் அளித்தனர். அதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்தனர். சம்பந்தப்பட்ட 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களை தனிப் படையினர் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்