நெல்லை, தென்காசியில் - மழையின்றி 10 நாட்களுக்கு பின் வெயில் :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங் களில் நேற்று வறண்ட வானிலை நிலவியது.

திருநெல்வேலியில் நேற்று முன் தினம் இரவு லேசான மழை பெய்தது. கடந்த 10 நாட்களுக்குப் பிறகு இவ்விரு மாவட்டங்களிலும் நேற்று நல்ல வெயில் அடித்தது. பல்வேறு இடங்களில் வெள்ளம் வடிந்திருந்தது. நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் தென்காசி மாவட்டம் சிவகிரியில் 13.20 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. கருப்பாநதி அணைப்பகுதியில் 2 மி.மீ., குண்டாறு அணைப்பகுதியில் 1 மி.மீ., திருநெல்வேலியில் 3.60 மி.மீ. மழை பெய்திருந்தது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (அடைப்புக்குள் உச்சநீர் மட்டம்): பாபநாசம்- 138.45 (143), சேர்வலாறு- 141 (156), மணிமுத் தாறு- 113.90 (118), வடக்கு பச்சையாறு- 45.50 (50), நம்பியாறு- 22.96 (22.96), கொடுமுடியாறு- 50.50 (52.25), கடனா- 82.70 (85), ராமநதி- 82 (84), குண்டாறு- 36.10 (36.10), அடவி நயினார்- 130.75 (132.22).

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்