துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு - ஊராட்சி மன்ற தலைவர்கள் உண்ணாவிரதம் : அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

அதிகாரம் பறிக்கப்படுவதை கண்டித்து துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற தலைவர்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம், போளூர், செங்கம் மற்றும் புதுப்பாளையம் ஒன்றி யங்களில் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்யும் அதிகாரத்தை ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்க மறுக் கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு, எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப் பினர், வட்டார வளர்ச்சி அலு வலர், ஆட்சியர் மற்றும் முதல் வரின் தனிப்பிரிவுக்கு மனு அளித் துள்ளனர்.

இந்நிலையில், ஊராட்சி மன்ற தலைவர்களின் அதிகாரத்தை பறிக்கும் வட்டார வளர்ச்சி அலு வலரை கண்டித்து துரிஞ்சாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற தலைவர்கள் நேற்று உண்ணாவிரதப் போராட் டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், சட்டையில் கருப்பு பட்டை அணிந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

உண்ணாவிரதப் போராட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளரும், மருத்துவாம்பாடி ஊராட்சி மன்ற தலைவருமான எம்.சிவக்குமார் கூறும்போது, “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ஒரு கிராமத்தில் மேற்கொள்ள வேண்டிய பணியை தேர்வு செய்யும் அதிகாரம், பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் படி ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் தலையிட்டு பணிகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மேலும், பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், பயனாளிகள் தேர்வு செய்யும் அதிகாரமும் பறிக்கப்பட்டுள்ளது. விதிகளின் படி ஏழைகளுக்கு வீடு வழங்காமல், வசதி படைத்தவர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில், ஆளுங்கட்சியின் தலையீடு உள்ளது. இதற்கு அதிகாரிகளும் துணையாக உள்ளனர்.

அதேபோல், ஒவ்வொரு ஊராட்சியின் நிர்வாகத்துக்கு பராமரிப்பு செலவுக்காக வழங்க வேண்டிய நிதியை கடந்த பல மாதங்களாக ஒதுக்கவில்லை. பஞ்சாயத்துராஜ் சட்டத்தை மீறி செயல்படுவதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம். இதற்கு கலசப்பாக்கம் ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்களும் ஆதரித்துள்ளனர்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்