திருப்பத்தூர் மாவட்டத்தில் : கன மழையால் : சேத மதிப்பு அதிகரிப்பு :

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் சேத மதிப்பு தற்போது அதிகரித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 11-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை பரவலாக மழை பெய்தது. இதில், நவம்பர் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை அதிக கனமழை கொட்டியது. இதன் மூலம் மாவட்டம் முழுவதும் நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பியது. குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.

கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகளை இழந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை வருவாய்த் துறையினர் செய்து வருகின்றனர். கடந்த மாதம் சேத மதிப்பு குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கணக்கீடு செய்யப்பட்ட நிலையில் தற்போது சேத மதிப்பு அதிகரித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி, வீடுகளை இழந்த வகையில் 4,425 நபர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழையால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 9 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 2 பேர் கனமழையால் வீடு இடிந்த வகையில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

471 குடிசை வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. 1,671 ஹெக்டேரில் பயிரிடப்பட்ட பயிர் வகைகள் நீரில் மூழ்கி சேதமாகியுள்ளன. இதன் மூலம் 4,472 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள னர். விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான சேத விவரம் சேகரிக்கப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்