சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் - ரூ.6 கோடியில் அடிப்படை கட்டமைப்பு பணி :

By செய்திப்பிரிவு

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தின் 5-வது நடைமேடையில் ரூ.6 கோடி செலவில் நவீன நிழல் கூடாரம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களை வட மாநிலங்களுடன் இணைக்கும் முக்கிய ரயில் நிலையமாக உள்ளது. சேலம் வழியாக, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், கொச்சி, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, டெல்லி என பல முக்கிய நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ரயில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், ரயில் நிலையத்தில் 5-வது நடைமேடையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை நவீனப்படுத்தும் பணி ரூ.6 கோடி செலவில்நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

சேலம் ரயில் நிலையத்தில் 5-வது நடைமேடையை நவீனப்படுத்தும் பணி ரூ.6 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நடைமேடையில் கிரிக்கெட் மைதானங்களில் அமைக்கப்படும் கூடாரம்போல நவீன நிழல் கூடாரம் அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும், நகரும் படிக்கட்டுகள், டைல்ஸ் தரைதளம், கழிப்பறைகள், நவீன மின் விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்