சேலத்தில் தொழிற்சாலை மின் இணைப்பு துண்டிப்பு :

By செய்திப்பிரிவு

சேலத்தில் அரசின் தடையை மீறி பிளாஸ்டிக்கை பயன்படுத்தி பேப்பர் கப் தயாரித்த தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

ஒருமுறை பயன்படுத்தி வீசி எறியும் பிளாஸ்டிக் வகைகளைப் பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், சேலம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் சேலம் அம்மாப்பேட்டை காமராஜர் காலனியில் பேப்பர் கப் உற்பத்தி தொழிற்சாலையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இதில், தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட பேப்பர் கப் உட்புறம் 3 முதல் 4 சதவீதம் வரை பிளாஸ்டிக்கை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, தொழிற்சாலையின் மின் இணைப்பு ஆட்சியரின் உத்தரவின்பேரில் துண்டிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்