விழுப்புரம் ஆட்சியர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான இணைப்புச் சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதன்படி ஸ்கூட்டர் பெறுவதற்கு இரண்டு கால்கள் பாதிக்கப்பட்டு, இரண்டு கைகள் நல்ல நிலையில் உள்ள கல்வி பயிலும் மாணவ, மாணவிகள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கலாம்.
8, 9-ம் தேதிகளில் நேர்முக தேர்வு
இதேபோல் சுயதொழில் புரியும் மாற்றுத்திறனாளிகள், இதுநாள் வரை இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் விண்ணப்பிக்காதவர்கள் மற்றும் பெறாத தகுதியுடையவர்கள் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகம், விழுப்புரம் என்ற முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரடியாகவே விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.அதற்கான நேர்முகத் தேர்வு வருகிற 8 மற்றும் 9-ம் தேதிகளில் மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago