கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆண்களுக்கான நவீன கருத்தடை விழிப்புணர்வு ரதத்தை மாவட்ட ஆட்சியர் நேற்று தொடங்கி வைத்தார்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 21.11.2021ம் தேதி முதல் வரும் 04.12.2021 வரை ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை முறைகள் குறித்து விளக்க கையேட்டின் வாயிலாகவும், விழிப்புணர்வு பிரசுரங்கள், போஸ்டர்கள், பதாகைகள் மூலம் விழிப்புணர்வு செய்யப்படுகிறது. இதே போல் நவம்பர் 28-ம் தேதி முதல் வரும் 4- ம் தேதி வரை சிதம்பரம், விருத்தாசலம், கடலூர் அரசு மருத்துவமனைகளில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் கருத்தடை சிகிச்சை இலவசமாக செய்யப்படுவதுடன் ஊக்கத் தொகையாக ரூ.1,100, ஊக்குவிப்போருக்கு ரூ.200 தமிழக அரசால் வழங்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தெரிவித்தார். கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ரஞ்ஜீத்சிங், இணை இயக்குநர் (நலப்பணிகள்) மருத்துவர் ரமேஷ்பாபு, துணை இயக்குநர் (சுகாதாரம்) மருத்துவர் மீரா, துணை இயக்குநர் (குடும்பநலம்) மருத்துவர் பரிமேலழகர், தேசிய சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் காரல், கடலூர் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் சாய்லீலா மற்றும் மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago