உசிலம்பட்டி கண்மாய் வரத்து கால்வாயில் தடுப்பு : மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

உசிலம்பட்டி பகுதி கண்மாய் களுக்கு தண்ணீர் செல்வதை தடுக் கும் வகையில் ஜோதி மாணிக்கம் பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரிய வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத் தரவிட்டுள்ளது.

மதுரை கோவிலாங்குளத்தைச் சேர்ந்த சந்திரன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: உசிலம்பட்டி பகுதியில் 2000 ஏக்கரில் விவசாயம் நடக்கிறது. இப்பகுதி கண்மாய்களுக்கு திரு மங்கலம் பாசனக் கால்வாய் வழியாக பெரியாறு வைகை ஆற் றிலிருந்து தண்ணீர் விடப்படுகிறது.

இந்நிலையில் திருமங்கலம் பாசனக் கால்வாய் வழியாக உசிலம் பட்டி பகுதி கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும் பாதையில் ஜோதிமாணிக்கம் கிராமத்தில் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல கண்மாய்களுக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த தடையை அகற்றி கொடிமங்கலம் கண்மாய், ஜோதிமாணிக்கம் கண்மாய், கோவிலாங்குளம் பெரிய கண் மாய், ஆண்டிகுளம் கண்மாய், வளையன்குளம் கண்மாய், நவநீதன்குளம் கண்மாய்க்கு தடை யில்லாமல் தண்ணீர் செல்வதை உறுதிப்படுத்த உத்தரவிட வேண் டும்.

இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக மதுரை ஆட்சியர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE