அரசு ராஜாஜி மருத்துவமனையில் எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு :

மதுரை ஏஆர்டி மையம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சார்பில் நடந்த இந்நிகழ்ச்சியில் ஏஆர்டி மாவட்ட திட்ட மேலாளர் ஜெயபாண்டி வரவேற்றார்.

ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் தலைமை வகித்தார். மருத்துவமனை முதல்வர் ஏ.ரத்தினவேலு பேசினார். எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு மற்றும் கையெழுத்து இயக்கம் நடந்தது.

மருத்துவக் கண்காணிப்பாளர் விஜயராகவன், துணை கண்காணிப்பாளர் தர்மராஜ், பொது சுகாதாரம் துணை இயக்குநர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆட்சியர் அனீஷ்சேகர் பேசுகையில், ‘‘மதுரை ஏஆர்டி மையம் 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இம்மையம் மூலமாக எச்ஐவி தொற்று உள்ளோருக்கு கூட்டு மருந்து சிகிச்சை இலவசமாக வாழ்நாள் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. 9 மாவட்டங்களைச் சேர்ந்த எச்ஐவியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மதுரை ஏஆர்டி மையத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று கூறினார். ஏஆர்டி மருத்துவர் ரஞ்சித் ராம்குமார் நன்றி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE