நெல் மூட்டைகளை பாதுகாக்க - மதுரையில் கூடுதல் சேமிப்பு கிடங்குகள் : அமைச்சர் சக்கரபாணி தகவல்

மதுரையில் கொள்முதல் செய் யப்படும் நெல் மூட்டைகளைப் பாதுகாக்க கூடுதல் சேமிப்புக் கிடங்குகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

சென்னை செல்வதற்காக நேற்று மதுரை விமான நிலை யத்துக்கு வந்த அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் விவ சாயிகளிடம் கொள்முதல் செய் யப்படும் நெல்லுக்கு உடனே பணம் வழங்கப்படுகிறது. திறந்த வெளி சேமிப்புக் கிடங்குகளில் மழையால் நெல் மூட்டைகள் வீணாகாமல் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடு தலாக 3 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட் டுள்ளது. தினமும் 500 மெட்ரிக் டன் நெல் அரைக்கும் வகையில் இயந்திரங்கள் நிறுவப்பட்டு நெல் அரைக்கப்படும்.

மதுரையில் 25 கொள்முதல் மையங்களில் 24 மையங்கள் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் செயல்படுகின்றன. நெல்மூட்டை களைப் பாதுகாக்க மதுரையில் கூடுதல் சேமிப்புக் கிடங்குகளை அமைக்க நடவடிக்கை எடுக் கப்படும். பொங்கல் பரிசு தொகுப்பில் பனைவெல்லம் கொடுக்க வாய்ப்பு இல்லை. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE