12 ஆயிரம் கன அடி தண்ணீர் வருவதால் - மதுரை வைகை ஆற்றில் மீண்டும் வெள்ளம் :

12 ஆயிரம் கனஅடி நீர் வருவதால் மதுரை வைகை ஆற்றில் மீண்டும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தரைப்பாலங்கள் மூழ்கியதால் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வைகை அணை நீர்மட்டம் நேற்று 70.11 அடியாக இருந்தது. அணையின் கொள்ளளவு 71 அடி. அணைக்கு 7,304 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இந்த தண்ணீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

ஆற்று வழித்தடங்களில் பெய்யும் மழை, சிற்றாறுகளில் வந்து சேரும் தண்ணீரையும் சேர்த்து தற்போது மதுரை வைகை ஆற்றில் 12 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்கிறது.

அதனால் 15 ஆண்டுகளுக்குப் பிறகு வைகை ஆற்றில் இரு கரைகளையும் தொட்டவாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மதுரையில் உள்ள வைகை ஆறு தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

ஏற்கெனவே இரண்டு தரைப்பா லங்களில் உயர்மட்டப் பாலங்கள் கட்டும் பணி நடப்பதால், ஆற்றை கடந்து செல்ல ஏவி மேம்பாலம், செல்லூர் மேம்பாலங்களை மட்டுமே பயன்படுத்தும் நிலை உள்ளது.

இதனால் இரு பாலங்களிலும் நேற்று காலை முதல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் வெளியிட்டுள்ள அறிக் கையில், வைகை ஆற்றில் 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் செல்வதால் கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படியும், கால்நடைகளை ஆற்றின் கரையோரம் கட்டிப்போட வேண்டாம் என்றும், ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE