மதுரை கோச்சடை கண்மாய் குப்பை மேடாகி காணாமல் போய் வருகிறது.
மதுரை மாநகராட்சி 22-வது வார்டில் கோச்சடை கண்மாய் உள்ளது. இதை நம்பி 96.36 ஏக்கர் விவசாய பாசனம் உள்ளது.
கண்மாயை தூர்வாரி மழை நீரை தேக்க பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுக்காததால் பாசன நிலங்கள் வானம் பார்த்த பூமியாக காணப்படுகின்றன.
மதுரையில் கனமழை பெய் வதால் அனைத்து கண்மாய்களும் நிரம்பி வருகின்றன. ஆனால், கோச்சடை கண்மாய்க்கு தண்ணீர் வராமல் குப்பை மேடாகி கண்மாய் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் வருகிறது.
இதுகுறித்து நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங் கிணைப்பாளர் அபுபக்கர் கூறி யதாவது: கோச்சடை கண்மாயின் கொள்ளளவு 10.5 மில்லியன் கன அடி. வைகை ஆற்று தண்ணீர் துவரிமானில் இருந்து 2 கி.மீ. கால்வாய் வழியாக கோச்சடை கண்மாய்க்கு வந்தது.
தற்போது இந்த கண்மாய் பாசன நிலங்கள் குடியிருப்புகளாக மாறியதால் கண்மாயின் தேவை குறைந்துவிட்டது. அதனால், 20 ஆண்டுக்கு முன் கண்மாயை பொதுப்பணித் துறை கைவிட்டது.
இந்தக் கண்மாயை சீரமைத்து பராமரிக்க உயர் நீதிமன்றம் மாநகராட்சிக்கு ஏற்கெனவே உத் தரவிட்டது.
கண்மாயில் உள்ள குப்பை மேட்டை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago