நகை, பயிர்க் கடன் வழங்கியதில் ரூ.1,000 கோடி முறைகேடு : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

நகை, பயிர்க் கடன் வழங்கியதில் ரூ.1,000 கோடிக்கு மேல் மோசடி நடைபெற்றிருப்பது கண்டறியப் பட்டுள்ளது என அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் தெரிவித்தார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்ட அரங்கில் தொழிலாளர் நலத் துறை சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆட்சியர் அனீஷ்சேகர் தலைமை வகித்தார். ரூ.81 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியா கராஜன் ஆகியோர் வழங்கினர்.

நிகழ்ச்சியில் கூடுதல் தொழிலாளர் ஆணையர் தி.கும ரன், தொழிலாளர் இணை ஆணையர் பெ.சுப்பிரமணியன், தொழிலாளர் உதவி ஆணையர் சீ.மைவிழிச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதேபோல் மதுரையில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நூறு பேருக்கு ரூ.12 லட்சம் மதிப்பில் முதியோர் மற்றும் விதவை உதவித் தொகை, ஏழு பேருக்கு ரூ.5,47,817 மதிப்பில் மோட்டார் வாகனங்கள், சக்கர நாற்காலிகள் உள்ளிட்டவற்றை அமைச்சர் பழனிவேல் தியாகரா ஜன் வழங்கினார்.

பின்னர் அவர் பேசும்போது, முதியோர் உதவித் தொகை திட்டத்தில் தகுதியானவர்களுக்கு நிதி உதவி கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். நகை, பயிர்க் கடன் வழங்கியதில் ரூ.1,000 கோடிக்கு மேல் மோசடி நடைபெற்றிருப்பதை கண்டறிந்துள்ளோம். அது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று கூறினார்.

மாநகராட்சி ஆணையர் கார்த்தி கேயன், பூமிநாதன் எம்எல்ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் செந் தில்குமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE