கோமாரி நோயால் உயிரிழக்கும் கால்நடைகள் : தடுப்பூசி செலுத்த புதுக்கோட்டை விவசாயிகள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்படாததால் ஏராளமான பசுமாடுகள் இறந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 345 பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தினசரி 79 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப் பட்டு வந்தது. இதுதவிர, தனியார் பால் நிறுவனம் மற்றும் பிற இடங் களுக்கு விவசாயிகளே நேரடியாக பால் விநியோகம் செய்கின்றனர்.

இந்நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏராளமான பசு மாடுகள் உயிரிழந்து வருகின்றன. முறையாக கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்படாததாலேயே இவ்வாறு இறப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எம்.கே.ஆரோக்கியசாமி கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவின் நிர்வாகத்துக்கு நாளொன் றுக்கு 79 ஆயிரம் லிட்டர் பால் விவசாயிகளால் வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஒன்றரை ஆண்டு களாக கோமாரி தடுப்பூசி செலுத் தப்படாததால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பசுமாடுகள் இறந்துள் ளன. மேலும், தற்போது மழைக் காலம் தொடங்கிய பின் பசுமாடு களை முறையாக பராமரிக்க முடியாததால் பால் உற்பத்தி படிப் படியாக குறைந்து, ஆவினுக்கு தற்போது 50 ஆயிரம் லிட்டர் மட்டுமே வழங்க முடிகிறது.

இறந்த பசு மாடுகளுக்கு காப்பீடு செய்யாததால் இழப்பீடும் பெறமுடியவில்லை. அரசு நிவா ரணமும் வழங்கவில்லை. எனவே, ஓரிரு நாட்களுக்குள் கால்நடை களுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து பசுமாடுகளுக்கும் அரசே பிரீமியத் தொகையை செலுத்தி காப்பீடு செய்ய வேண்டும். ஆவின் நிர்வாகம் மானியம் மூலம் தீவனம் வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.

இது தொடர்பாக மாநில கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் பால்வளத் துறை அமைச் சருக்கு கோரிக்கை மனு அனுப்பி யுள்ளோம் என்றார்.

இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர் களிடம் கேட்டபோது, “தடுப்பூசி வராமலிருந்ததால் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது, படிப்படியாக முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வரு கிறது” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்