திமுகவில் சேர போலீஸாரை வைத்து மிரட்டுவதாக தாக்கல் செய்த - அதிமுக ஒன்றிய செயலாளர் மனு தள்ளுபடி :

By செய்திப்பிரிவு

கரூர் ரெட்டிபாளையத்தைச் சேர்ந்த மதுசூதன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: கரூர் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளராக உள்ளேன்.

என்னையும், கரூர் மாவட்ட அதிமுகவினரையும் திமுகவில் சேருமாறு மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கட்டாயப்படுத்தி வருகிறார். அவரது அழைப்பை ஏற்க மறுக்கும் அதிமுகவினர் மீது பொய் வழக்குப் பதிவு செய் வதாக மிரட்டுகின்றனர். போலீஸா ரும் திமுகவினரின் நடவடிக்கை களுக்கு உடந்தையாக உள்ளனர்.

அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் திமுகவில் இணையுமாறு என்னை போலீஸாரை வைத்து கட்டாயப்படுத்தினர். திமுகவில் சேரமறுத்தால் என் மீது போதை பொருள் கடத்தல் வழக்குப் பதிவு செய்வதாக மிரட்டினர்.

இந்நிலையில் நவ.15-ல் போலீஸார் என் வீட்டுக்கு வந்து ஒரு வழக்கு தொடர்பாக விசார ணைக்கு வருமாறு என்னை அழைத்தனர். முறையாக காரணம் தெரிவிக்காததால் விசாரணைக்கு செல்ல மறுத்து விட்டேன். இதனால் என் மீது பொய் வழக்குப் பதிவு செய்வதற்கு வாய்ப்புள்ளதாக அச்சம் உள்ளது. எனவே, என்னை தொந்தரவு செய்யக்கூடாது என போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித் தார். பின்னர் மனுதாரர் பொது வான குற்றச்சாட்டுகளுடன் ஆவ ணங்கள் எதுவும் இல்லாமல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதனால் மனுதாரரின் கோரிக் கையை ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்