உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு மற்றும் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசிய தாவது:
புதிய எச்.ஐ.வி. தொற்று இல்லாத, எச்.ஐ.வி. தொற்று உள்ளவர்களை புறக்கணிப்பு செய்யாத மற்றும் எய்ட்ஸ் தொடர்பான இறப்புகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும். பல்வேறு துறை களின் ஒருங்கிணைப்பால் இந்திய அளவில் எச்.ஐ.வி- எய்ட்ஸின் தாக்கம் 15 முதல் 49 வயதினரிடையே 57சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 2007-ம் ஆண்டில் 1.8 சதவீதமாக இருந்த பாதிப்பு 2020-ல் 0.07 சதவீதமாகவும், இந்த ஆண்டில் 0.06 சதவீதமாகவும் குறைந் துள்ளது. வருங்காலங் களில் திருநெல்வேலி மாவட்டத்தில் எச்.ஐ.வி.யால் ஒரு நபர் கூட பாதிக்கப்படக்கூடாது என்ற உறுதியுடன் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.
எய்ட்ஸ் தடுப்பு மற்றும் பராமரிப்பு பணிகளில் சிறப்பாக பணியாற்றிய 50 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார். சுகாதார பணிகள் துணை இயக்குநர் கிருஷ்ணலீலா, திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை முதல்வர் டாக்டர் ரவிச்சந்திரன், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி தலைமை மருத்துவர் மணிமாலா, நுண்ணுயிரியல் துறை தலைவர் மருத்துவர் பூங்கொடி, எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுபாட்டு அலகு மாவட்ட மேற்பார்வையாளர் ஜெயக்குமார் பங்கேற்றனர்.
தென்காசி
தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் ஏ.ஆர்.டி. மையம் சார்பில் உலக எய்ட்ஸ் தின விழா நடைபெற்றது. நலப்பணிகள் இணை இயக்குநர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின், உறைவிட மருத்துவ அலுவலர் அகத்தியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எய்ட்ஸ் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மேலும், நலப்பணிகள் இணை இயக்குநர் அலுவலகத்தில் சிறப்பு மாற்றுத்திறனாளிகள் நல முகாம் நடைபெற்று. இதில், 64 பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago