மழைநீர் வடியாமல் தேங்கியுள்ளதால் - நெல்லையில் மக்கள் அவதி : தாமிரபரணியில் வெள்ளம் நீடிப்பு

By செய்திப்பிரிவு

திருநெல்வேலியில் தொடர் மழையால் குடியிருப்பு பகுதி களிலும், சாலைகளிலும் தேங்கி யுள்ள தண்ணீர் வடியவில்லை என்பதால் பொதுமக்கள் அவதியு றுகிறார்கள். போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவந்த மழை நேற்று பகலில் ஓய்திருந்தது. காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பல்வேறு இடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):

சேரன்மகாதேவி- 34.6, கொடுமுடியாறு- 30, பாபநாசம்- 15, நம்பியாறு- 10, மணிமுத்தாறு- 9, சேர்வலாறு, களக்காடு மற்றும் அம்பாசமுத்திரம் தலா - 7, பாளையங்கோட்டை- 4, நாங்கு நேரி- 2, திருநெல்வேலி- 1.2.

பாபநாசம் அணையின் நீர்மட்டம் 138 அடியாக இருந்தது. அணைக்கு 4,651 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 5,699 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 112.80 அடியாக இருந்தது. அணைக்கு 2,190 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

22.96 அடி உச்சநீர்மட்டம் கொண்ட நம்பியாறு நிரம்பியுள்ள நிலையில் அணைக்கு வரும் 1,500 கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது.

பாபநாசம், சேர்வலாறு அணை களில் இருந்து பெருமளவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ள தாலும், காட்டாற்று வெள்ளம் சேர்வதாலும் தாமிரபரணியில் வெள்ளம் நீடிக்கிறது.

தண்ணீர் வடியாமல் தவிப்பு

திருநெல்வேலி அருகேயுள்ள திருப்பணிகரிசல்குளம், கிருஷ்ணபேரி குளம், வாகைகுளம் ஆகியவை நிரம்பி மறுகால் பாய்கிறது. இப்பகுதிகளில் கால்வாய்கள் தூர்வாரி செப் பனிடப்படவில்லை.

இதனால், குடியிருப்புகளுக் குள் தண்ணீர் புகுந்துள்ளது. திருநெல்வேலி டவுனில் தெற்கு மவுண்ட் ரோடு, செண்பகம்பிள்ளை தெரு, தடிவீரன் கோயில் தெரு, கல்லணை பள்ளி அமைந்துள்ள சாலை உள்ளிட்ட பல்வேறு தெருக்களிலும் தேங்கிய தண்ணீர் வடியவில்லை.

இதனால், இப்பகுதி மக்கள் அவதியுறுகிறார்கள். டவுன் கல்லணை மகளிர் மேல் நிலைப்பள்ளியை சூழ்ந்துள்ள வெள்ளம் வடியவில்லை என்பதால் அப்பள்ளிக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. வெளியிடங்களில் இருந்து பள்ளிக்கு வந்த மாணவியர் திருப்பி அனுப்பப்பட்டனர்.

திருநெல்வேலி கால்வாயில் தண்ணீர்வரத்து அதிகமுள்ள நிலையில், கால்வாயை தாண்டி தண்ணீர் தெருக்களுக்குள் பெருக்கெடுத்துள்ளது. இதனால், தெற்கு மவுண்ட் ரோடு பகுதியில் வாகனங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

திருநெல் வேலி டவுனில் பகத்சிங் தெருவில் திருநெல்வேலி கால்வாயின் மேல்பகுதியிலுள்ள பாலத்தின் தூண்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

4 அணைகள் நிரம்பி மறுகால்

தென்காசி மாவட்டத்தில் நேற்று மழையின் தீவிரம் குறைந்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் பல்வேறு இடங்களில் பதிவான மழை விவரம் (மில்லி மீட்டரில்): கடனாநதி அணை 36, கருப்பாநதி அணை 27, ஆய்க்குடி 21, தென்காசி 16.80, சிவகிரி 12.20, குண்டாறு அணை 6, செங்கோட்டை மற்றும் சங்கரன்கோவிலில் தலா 5, அடவிநயினார் அணை 3.

அடவிநயினார் அணை தவிர மற்ற 4 அணைகளும் நிரம்பியுள்ளதால் அந்த அணைகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. கடனாநதி அணையில் இருந்து விநாடிக்கு 689 கனஅடி, ராமநதி அணையில் இருந்து 100 கனஅடி, கருப்பாநதி அணையில் இருந்து 420 கனஅடி, குண்டாறு அணையில் இருந்து 80 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. 132.22 அடி உயரம் உள்ள அடவிநயினார் அணை நீர்மட்டம் 130.50 அடியாக இருந்தது. அணைக்கு 60 கனஅடி நீர் வந்தது. 30 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

குற்றாலம் அருவிகளில் நேற்றும் வெள்ளப்பெருக்கு நீடித்தது. கரோனா பரவல் காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்க இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை. வெள்ளத்தில் சேதமடைந்த நடைபாதைக் கற்கள், தடுப்புக் கம்பிகளை சீரமைத்து இந்த மாதத்தில் குற்றாலம் அருவிகளில் பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்