வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த செல்வகுமார் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளராக ராஜேஷ் கண்ணன் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ராஜேஷ்கண்ணன் நேற்று காலை பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு, காவல் துறை அதி காரிகள், அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "வேலூர் மாவட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்க மாவட்டம். வேலூர் மாவட்டத்தில் இருந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு இதுவரை இங்கு பணியாற்றி வந்த காவல் அதிகாரிகள் சிறப்பாக பணியாற்றி பிரச்சினைகளுக்கு தீர்வும் கண்டுள்ளனர்.
அதன்படி, எனது பணிகள் தொடரும். வேலூர் மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறேன். வேலூரில் ரவுடீசம் கட்டுக்குள் உள்ளது. அது தொடரும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். காவலர்கள் பணியில் அக்கறை செலுத்தப்படும்.
வேலூர் மாவட்டத்தில், இளம் சிறார் குற்றவாளிகள் அதிகரித்து வருகின்றனர். எந்த காரணத்துக்காக அவர்கள் குற்றவாளிகளாக மாறுகிறார்கள். அவர்கள் குற்றவாளிகளாக தூண்டுவது என்ன என்ற காரணம் என்பதை கண்டறிந்து, இளம் குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால், மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு விரைவில் தீர்வு காணப்படும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago